கற்பிட்டி கண்டகுழி கலப்பில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது கற்பிட்டிக்கு வருகைத் தந்துள்ள அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கண்டக்குழி பகுதியில் “kite Surfing” எனப்படும் நீர்ச்சருக்கள் விளைட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே நீர்ச்சருக்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (P)
நீர்ச்சருக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு கற்பிட்டி கண்டகுழி கலப்பு ஆழமற்று காணப்படுவதினால் விளையாற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிக இலகுவாக காணப்படுவதாகவும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த இடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று வீசுவதுடன், தினமும் மதியம் 12 மணி முதல் 4.30 மணி வரை காற்று அதிகமாக வீசுவது இந்த விளையாட்டுக்கு மிகவும் சிறந்தது என அந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர் குறிப்பிடுகின்றனர். (P)