யாழில் கனேடிய தூதரக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

னேடியத் தூதரக அதிகாரிகள் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை சந்தித்து கனடா வேலை வாய்ப்பு மோசடி பற்றி பேசினர். 

யாழில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பெறுமதிப்பிலான பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனடா அனுப்புவதாகக் கூறியே பெரும்பாலான பண மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்தினவின் வழிகாட்டலில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

 இவ்வாறான மோசடிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தரவுகள், தகவல்களைப் பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரிகள், மோசடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

Related Posts