கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள்: ஆய்வில் கண்டறிந்த உண்மை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Pfizer, Moderna மற்றும் AstraZeneca உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தடுப்பூசிகள் தொடர்பான மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக Forbes இதழ் தெரிவித்துள்ளது.

நோய் தடுப்புக்கான தடுப்பூசி கொவிட் நோய் பரவுவதைத் தடுக்கும் என்பதால், பக்கவிளைவுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று குறித்த ஆய்வு தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வெக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்வில், அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நோய்த்தடுப்பு மருந்து பெற்ற 99 மில்லியன் மக்களிடமிருந்து பதிவுகள் பயன்படுத்தப்பட்டன.

ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு 13 நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

Pfizer, Moderna  மற்றும் AstraZeneca  கொவிட் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து எவ்வாறு அதிகரித்தது என்பதை ஆய்வுக் குழு ஆய்வு செய்தது.

மொடர்னா எம்ஆர்என்ஏ மற்றும் பைசர் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்களைப் பெற்ற பிறகு, மாரடைப்பு அபாயம் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதை விட 6 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. (P)


Related Posts