அறிமுக ஹீரோயின் தான் ஆனால் இவ்வளவு பெரிய செல்வாக்கா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி இருப்பவர் ஸ்ரீலீலா. சொல்லப்போனால் பொருத்தமான ஹீரோயின். நடிப்பில் தூள் கிளப்புகிறார். நடனத்தில் மாஸ் காட்டுகிறார். தமிழ்நாட்டில் உள்ள கதாநாயகிக்கான வெற்றிடம் இவரால் பூர்த்தி செய்யப்படும் என்றால் கண்டிப்பாக அதில் மிகை இல்லை. பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஸ்ரீலீலா கடந்த பொங்கலுக்கு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 22 வயது மட்டுமே ஆகும் ஸ்ரீலீலாவுக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். 

இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 4.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். ஸ்ரீலீலா முன்னணி நடிகை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் MBBS படித்து முடித்திருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் தகவலாக இருக்கும். படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் இடைவேளையில் கூட அவர் படிப்பில் தான் கவனம் செலுத்துவாராம். அதன் மூலமாக அவர் டாக்டர் படிப்பை முடித்திருக்கிறார். ஸ்ரீலிலா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். 22 வயதிலே முன்னணி நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார், பணம், புகழ், படிப்பு, அழகு என இவரிடம் என்ன குறை உள்ளது? என சினிமா வட்டாரமே வியந்து வருகிறது.

Related Posts