மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்கள் மட்டுமே அந்த பெண் கணவருடன் வாழ்ந்துள்ளார்.
இதனை அடுத்து மனைவி தனது கணவர் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை போது கணவர் அளித்த வாக்குமூலத்தில் தான் 12 ஆம் வகுப்பு இந்த போது அந்த பெண்ணை காதலித்ததாகவும் திருமணம் செய்ய அந்த பெண் தான் அவசரப்பட்டதாகவும், அதனால் தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இப்போது அவர் பிரிந்து விட்டதால் தனது படிப்பும் போய் வேலையும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்
இந்த நிலையில் அமன் அவர்களின் படிப்பை கெடுத்து திருமணத்தை வலுக்கட்டாயமாக நடத்தியதற்காக அமன் அவர்களுக்குத்தான் அவருடைய மனைவி மாதம் 5000 தரவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Font size:
Print
Related Posts