பூமிக்கு அடியில் புதைந்து போன இலங்கையின் நகரம் கண்டுபிடிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.

 அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை பார்க்கக்கூடிய பிரத்யேக ரேடார் இயந்திரம் மூலம் பூமிக்குள் சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தகவலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

 பொலன்னறுவையின் வரலாறு தொடர்பான மேலும் மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று பொலன்னறுவை தொல்பொருள் தளத்திற்கு சொந்தமானவைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற​மை குறிப்பிடத்தக்கது.

Related Posts