கந்தசாமி மலை முருகன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு தடை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின்  தென்னமரவாடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமிமலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால் பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் (23) குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெருகல், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொது மக்கள் வருகை தந்திருந்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் 400க்கு மேற்பட்ட பொலிசார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் நுழையவிடாது பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, சமூக செயற்பாட்டாளர் நவரெத்தினராசா அஞ்சலி, ஆலய தலைவர் வைரமுத்து விஜயநாயகம் உட்பட அகம் அமைப்பின் அங்கத்தவர்கள், எல்லா அங்கத்தவ தமிழ் தேசிய மக்களும் என குறிப்பிட்டு புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தடையுத்தரவு வழங்கப்பட்டதுடன் ஏனைய பொதுமக்களும் தடுக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த இடம் பௌத்த விகாரைக்கு உரியது எனவும் இன்று நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து பொதுமக்களை பொலிசார்  திருப்பி அனுப்பியுள்ளனர். 




Related Posts