மாறுவேடத்தில் படம் பார்க்க சென்ற ரஜினி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஜினிகாந்த் பற்றி எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் படம் பார்க்க மாறுவேடத்தில் சென்ற சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஒருமுறை தன்னுடைய திரைப்படத்தை மாறுவேடத்தில் சென்றுள்ளார். கேப், கண்ணாடி எல்லாம் அணிந்துகொண்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார் ரஜினி.முழு படத்தையும் பார்த்த ரஜினி திரையரங்கிற்கு வெளியே வந்துள்ளார். 

அந்த சமயத்தில் ஒரு ரசிகர் தலைவா என அழைத்துள்ளார். இதை காதில் வாங்கிய ரஜினி, மாட்டிகிட்டோமே என மிரண்டு போய் பதட்டத்துடன் திரும்பி பார்த்துள்ளார். ஆனால் ஒரு ரசிகர் தன் நண்பர் ஒருவரை தான் தலைவா என அழைத்திருக்கிறார். அதன் பிறகு ரஜினி ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்த தகவலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடிக்கடி இப்படி மாறுவேடத்தில் செல்வதை ரசிகர்கள் பலரும் பார்த்துள்ளனர். அது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியது உண்டு!

Related Posts