18 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பயணித்து வருகிறார் அனுஷ்கா. பாகுபலி வெற்றிக்கு பின் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. காரணம் இவரது அதீத உடல் எடை என்றவாரும் ஒரு பக்கம் கருத்து எழுந்து வருகிறது. ஆனால் பாகுபலி படத்திலும் கூட இவர் உடல் எடை கூடிதான் இருநதார், இருப்பினும் ராஜமவுலி அனுஸ்காவின் திறமையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணி, உடல் எடை கூடி இருந்த அனுஷ்காவை கூட ஒல்லியாக காட்டி இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக வெற்றி படங்கள் அமையவில்லை.
தற்போது தன்னுடைய 50வது படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். இது முழுக்க முழுக்க கதாநாயகியாக மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள திரைப்படமாகும்.
இப்படத்திற்கு ஷீலாவதி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் வேதம் படத்தில் அனுஷ்கா நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அவருடைய கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த படம் மீண்டும் அனுஸ்காவிற்கு வெற்றி பாதையை காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.