பருத்திவீரன் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்! 75 கோடியில் கார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை பிரியாமணி. இதற்கு முன்னதாக இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. பருத்தி வீரன் படத்திற்கும் பின்னரும் கூட தமிழில் இவர் சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் நடிக்கவில்லை. இப்போது திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டி ஆகியுள்ளவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்துகிறார். பாலிவுட்டில் இப்போது இவர் கொடிகட்டி பறக்கிறார் என்றே சொல்லலாம். இப்படி அடுத்தடுத்து அவருடைய படங்கள் ஹிட் ஆகி வரும் நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் பிரியாமணி. தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று சொகுசு காரை வாங்கியுள்ளார். மெர்சடைஸ்- பென்ஸ் ஜிஎல்சி எனும் அந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ. 75 கோடி என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Related Posts