சால்வை சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்ட சிவகுமார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காரைக்குடியில் ரசிகர் ஒருவர் கொடுத்த சால்வையை நடிகர் சிவகுமார் தூக்கி எறிந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு முன்பு தன்னோடு செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்ட விவகாரமும் இப்படித்தான் பூதாகரமானது. இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள சிவகுமார், காரைக்குடி சால்வை விவகாரத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ கிடையாது. எனது 50 ஆண்டு கால நண்பர். என்னுடைய திருமணத்தில் பல வேலைகளை முன்னிருந்து செய்தவர். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை போர்த்த வந்தால் அவர்களுக்கே திரும்ப போர்த்தி விடுவேன். நிகழ்ச்சி முடிய நேற்று பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டது. சோர்வுடன் இருந்தபோதுதான் கரீம் எனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது எனத் தெரிந்துமே சால்வையுடன் நின்றிருந்தார். தெரிந்தே சால்வையுடன் நின்றிருந்தது அவர் தப்பு என்றால், அதை பொது இடத்தில் வாங்கி கீழே எறிந்ததும் என் தப்பு தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இவர் கேட்ட மன்னிப்பு கேட்டது குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்

Related Posts