சினிமாவில் ராஜ்ஜியம் செய்த MGR அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன். சினிமாவை தாண்டி அரசியல் மூலம் மக்களின் மனதை வென்றார். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என கூறும் அளவிற்கு மக்களுக்கு உதவியுள்ளார். இவரைப் போலவே தான் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் வளர்ச்சி காண்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அவரது உடல்நலம் ஒத்து வரவில்லை. ஒருவேளை விஜயகாந்த் இருந்திருந்தால் MGR ஐ விஞ்சும் அளவிற்கு கூட வளர்ந்திருப்பார் என கூறினால் அது மிகை இல்லை.
MGR யாரையும் மிரட்டவோ, அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்டாராம், மிகவும் பண்போடு நடந்துகொள்வாராம். இவரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களாம், ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் பெயர் சொல்லி அழைப்பாராம். மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என்று பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர் நடிகை பானுமதி தானாம். எம்ஜிஆரை பானுமதி பெயர் சொல்லி அழைத்தாலும் MGR மரியாதை குறைவாகவே எடுத்துக் கொள்ளாமல், எப்பவும் போல மிகவும் இயல்பாக பானுமதியுடன் பழகுவாராம்.