வயது முதிர்வால் காலமான பழம்பெரும் நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மேடை நாடகங்கள், டிவி சீரியல்கள், ஏராளமான படங்களிலும் நடித்து இருப்பவர் அடடே மனோகர். பல படங்களில் விவேக், வடிவேல் உள்ளிட்டோருடன் அவர் காமெடி காட்சிகளில் நடித்து பார்த்திருப்போம். அந்த காலத்தில் இவரது உடல் மொழி காமெடிக்கு என்றே சில ரசிகர்கள் இருப்பார்களாம். அவர் 90களில் நடித்த அடடே மனோகர் என்ற டிவி சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. டிடி சேனலில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி ஹிட் ஆனதால் அவருக்கு அதே பெயர் வந்துவிட்டது. 35 படங்களுக்கு மேல் நடித்துள்ள அடடே மனோகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts