Font size:
Print
டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சாப்பிட பாதுகாப்பானது அல்ல என்று தெலங்கானா மாநில உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாங்கிய கேட்பரி சாக்லேட்டில் உயிருள்ள புழு இருந்ததை கண்டு வாடிக்காயளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது. இதுகுறித்து அவர் புகார் அளித்தார். இதற்கு பதிலளித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சாக்லேட்டை சோதனை செய்ததில் வெள்ளை புழுக்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இந்த சாக்லேட்டுகளை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெரிய நிறுவனம் என்பதால் மக்களை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். வலிமையான அரசாக இருந்தால் அந்த சாக்லெட்டின் விற்பனையை தடை செய்வது தானே சரி?
Related Posts