இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப்பணி இல்லையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் என்ற திட்டத்தின்கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசுப்பணி பெறுவதற்கான தகுதி அற்றவர்கள் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்ந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்து, மனுவையும் நிராகரித்துள்ளது.

Related Posts