உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல் படை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது.

தெற்கு காசாவில் உள்ள குடிமக்கள் அல்-ரஷித் தெருவில் கூடினர். ஆம்புலன்ஸ்கள் எதுவும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாததால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாலஸ்தீனர்களின் உடல்கள் அங்குள்ள டிரக்குகளில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறும்போது, “நாங்கள் மாவு வாங்கச் சென்றோம். இஸ்ரேல் ராணுவம் எங்களை நோக்கி சுட்டது. அவர்கள் சுட்டதில் பலர் இறந்து தரையிலே விழுந்து விட்டனர். இந்த தருணத்தை எங்களால் மறக்க முடியாது. முதலுதவி செய்யகூட யாரும் இல்லை” என்றார் உயிர் பயத்துடன்.

உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், “காசாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உயிர்வாழ உணவு உதவி தேவைப்படுகிறது. 500,000-க்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கருதப்படுகிறது.

 உணவுப் பொருட்களை காசா மக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாத சூழல் இருப்பதால், அம்மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், வழியில் உணவு கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது” என்றார்.

Related Posts