அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் கடந்த ஜனவரி 6-ம் தேதி பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. லாட்டரி நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்றுஅந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ்.
இதையடுத்து லாட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லாட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், ஜான் சீக்ஸிடம், “உங்கள் எண்ணுக்கு லாட்டரி விழவில்லை. தவறுதலாக உங்கள் எண் குறிப்பிடப்பட்டுவிட்டது. உங்கள் லாட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள். இனி அது பயனற்றது” என்று கூறியுள்ளார்.
இதனால், ஜான் சீக்ஸ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது அந்த லாட்டரி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.