கொழும்பு கொட்டாஞ்சேனை சேதீட்ரல்(ஆண்கள்) கல்லூரி அதிபர் அவர்கள் கடந்த வாரம் கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கலாநிதி ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரியின் நிற பூச்சு வேலை திட்டத்திற்கான வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு
ஒரு வாரத்தில் தனது சொந்த நிதியில் இருந்து
ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் ஊடாக மூன்று லட்சம் ரூபாய் பெருமதியான காசோலையை இன்று(04/03) கல்லூரிக்குச் நேரில் சென்று கல்லூரி
அதிபரிடம் வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட முக்கியஸ்தர்களான றிஸ்கான் முகம்மட்,முகம்மட் றிஸ்வி,முகம்மட் ஹசன்,
விஜய் குமார்,அனுசன் (BRO) ஆகியோர்
கலந்து கொண்டதுடன்.
அங்கு உரையாற்றிய கலாநிதி ஜனகன்
அவர்கள் கூறியதாவது இப் பணிகள் அரசியலுக்காகவோ,எனது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ நான் மேற்கொள்ளவில்லை கல்வியின் ஊடாகத்தான் ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என்பது எனது நம்பிக்கை அந்த அடிப்படையில் கல்விக்காக எனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு வேலை திட்டங்களை
செய்து வருகின்றேன்.
அது எதிர்காலத்தில் சிறந்த
ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்கும்
என நம்புகிறேன் அவ்வளவுதான்
என்று தெரிவித்தார்.
அத்துடன் கல்லூரியின் முக்கிய தேவையான
இத் தேவையை பூர்த்தி செய்த கலாநிதி ஜனகன் அவர்களுக்கு பழைய மாணவர்களும்,பெற்றோர்களும்
தங்களின் நன்றிகளை தெரிவித்தார்கள். (P)