குண்டூசியை எல்லாம் சின்னம் என்றால் எப்படி ஏற்பது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக, சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், கர்நாடகாவை சேர்ந்த கட்சி தலைவர் விண்ணப்பித்த அன்றே அவருக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். 

இதைப் பார்க்கும் போது நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கொடுக்கக் கூடாது என்று திட்டமிட்டே செய்ததாக கருதுகிறேன்.தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் தான். புலி, மயில் எல்லாம் தேசிய சின்னம் என கூறிவிட்டு, தாமரையை மட்டும் பா.ஜ.,வுக்கு ஒதுக்கினார்கள்? ஸ்டேப்ளர் பின், குண்டூசியை எல்லாம் சின்னம் என்றால் எப்படி ஏற்பது?: 

உள்ளாட்சித் தேர்தல் துவங்கி, இடைத்தேர்தல், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறோம் என அவர் கூறினார்.

Related Posts