காமெடி நடிகர் தான் ஆனால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளார் பாருங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

1. காமெடி நடிகர் தான் ஆனால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளார் பாருங்க! லொள்ளு சபா சேஷு ஷங்கரை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். A1, டிக்கிலோனா, குலு குலு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது. இதன்மூலம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சேஷு. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இந்த பாட்டில் தான் இவர் படு வேகமாக வைரலாகி வருகிறார். இந்நிலையில், நகைச்சுவையாக மட்டுமே நாம் பார்த்து வந்த நடிகர் சேஷு, தன்னால் முடிந்த நன்மைகளை செய்து வருகிறார். வசதியில்லாத ஆறு பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளாராம் சேஷு. தன்னுடைய நகைச்சுவை பக்கத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டி வந்த நடிகர் சேஷுவிற்கு இப்படியொரு ஒரு பக்கம் இருக்கிறது என்று பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. முன்னதாக நடிகர் மயில்சாமி மற்றும் விவேக் கூட மீடியாவுக்கு தெரியாமல் பல நன்மைகளை செய்து வருகிறார். நிஜத்தில் காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோவாக உள்ளார்கள்.

Related Posts