ரேஷன் கார்டில் நீக்கப்பட்ட திட்டம் மீண்டுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் வழங்கி வருகின்றது பஞ்சாப் மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் தொடர்புடைய 40 ஆயிரம் ரேஷன் அட்டைகள் 2023 ஆம் ஆண்டு உணவு மற்றும் வழங்கல் துறையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வரவுள்ள தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் விதமாக ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் 40,000 பேருக்கும் இந்த மாதத்தில் இருந்து மீண்டும் பொருள்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts