ஆப்பிள் நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் அபராதம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் உலக மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சட்ட விதிகளை மீறியதாக ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,500 கோடி அபராதம் விதித்து, ஐரோப்பா ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப் ஸ்டோரை தாண்டி Spotify செயலியை பெற மலிவான வழிகள் உள்ளது எனக் கூறி, பயனர்களுக்கு அதன் சேவைகளை தடுத்ததாக 2019- ஆம் ஆண்டு Spotify தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts