டிடி விஜய் டிவியில் இருந்து காணாமல் போக காரணம் யார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டிடி தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு தொகுப்பாளினி. இவருக்கு நிகர் இவரே! 20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தும் கூட தனக்கு பிடித்த தொகுப்பாளினி வேலையையே செய்து வருகிறார். இவர் நிகழ்ச்சியை நடத்துவதோடு மிகவும் கலகலப்பாக பார்ப்போரையும் ஆர்வமாக பார்க்க வைப்பார். இதனாலே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். ஹீரோயினுக்கு இணையான வரவேற்பு இவருக்கும் உண்டு. ஆனால் இவர் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை,காரணம் இவரது காலில் ஏற்பட்ட பாதிப்பு தான் என்றார்கள். அண்மையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி டிடி தனது உடல்நிலை குறித்து பேசியுள்ளார். எனக்கு ஒரு புது ஷோ கொடுங்கள் அதற்கு ஒரு வாரம் மட்டும் டைம் தாருங்கள் அதில் என்னுடைய பெஸ்டை நான் கொடுக்கிறேன். மக்களுக்கோ உங்களுக்கோ பிடிக்கவில்லை என்றால் அந்த நிகழ்ச்சியை நிறுத்திடுங்க என கூறியுள்ளார் டிடி. பின் நிகழ்ச்சி செம ஹிட்டாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைய டிடி விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக மாறி இருந்தார். 

மேலும் நம்முடைய உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நம்மால் அடுத்தடுத்து வேலைகளை பார்க்க முடியும். நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பது என்னுடைய வாழ்க்கையில் நான் லேட்டாக கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார், மேலும் அதிக நேரம் நின்றுகொண்டே ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகி ஆபரேஷன் செய்யப்பட்டு, பின்னர் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் காலில் வலி ஏற்பட்டு அவதிக்கு உள்ளானேன். அதனால் மீண்டும் ஆப்ரேஷன். இருப்பினும் அது யூஸ்லெஸ். அதனால் இப்போது வரைக்கும் நான் அந்த வலியோடு தான் நிற்கிறேன். அதனாலேயே நான் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என கூறியுள்ளார்.

Related Posts