நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளா இது? ஹீரோயின் போல் மாறிவிட்டாரே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர். உலக அழகி பட்டியலில் இவரை யாராலும் மறக்கமுடியாது. உலக அழகி என்றால் இப்போதும் நினைவுக்கு வருவது இவர் தான். சமீபத்தில் இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். ஐஸ்வர்யாவுக்காகவே படம் பார்க்க தமிழ் ரசிகர்கள் குவிந்தார்கள். ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டார் கிட் ஆக ஆராத்யா வலம் வருகிறார். ஏர்போர்ட் வரும் வீடியோ, பள்ளி விழாவில் டான்ஸ் ஆடும் வீடியோ என ஆரத்யாவின் வீடியோக்கள் இணையத்தில் உலா வரும். தற்போது ஐஸ்வர்யா ராய் உடன் மகள் ஆராத்யா அம்பானி குடும்ப திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.ஆராத்யா நன்றாக வளர்த்து ஹீரோயின் போல மாறிவிட்டாரே என அவரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related Posts