அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் ஜான்.சி.டியூன் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இரவு 7:40 மணியளவில் விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி ஒருவர், தான் ஓட்டி வரும் விமானம் பழுதடைந்து இருப்பதால் அவசரமாக தரையிறங்க வேண்டும் என அனுமதி கோரியுள்ளார்.
விமான நிலைய அதிகாரிகளும் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமான நிலையத்தை அடைவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐ-40 என்ற நெடுஞ்சாலை அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக போலீஸாரும் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகி, பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தீயை அணைத்துவிட்டு விமானத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சித்த போது விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1764856561803911255