மார்ச் 23ல் Brian Mulroney இறுதிச்சடங்கு அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் பிரதமர் Brian Mulroney இறுதிச்சடங்கு மொன்றியலில் நடைபெறவுள்ளது. வரும் 23ஆம் திகதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 84. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

அவரது பூதவுடல் இறுதி சடங்கிற்கு முன்னர் ஒட்டாவவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இறுதி சடங்கு அரசு முறையில் நடைபெற உள்ளது.

Progressive Conservative கட்சியின் தலைவராக Brian Mulroney, 1984 முதல் 1993 வரை ஒன்பது வருடங்கள் கனடிய பிரதமராக பதவி வகித்துள்ளார். 

ஈழ தமிழர்கள் புகலிடம் தேடி கனடா வந்தபோது இன்முகத்துடன் வரவேற்ற பெருமைக்கு உரியவர். 

Related Posts