ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் தொடர்பான புத்தகங்கள் இன்றைய தினம் வெளியாகவுள்ளன.
‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை விரட்டியடித்த சூழ்ச்சி” என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்படவுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக யுத்தத்திற்கு வெற்றிப் பெற்றமை முதல் இலங்கைக்கு எதிராக வெளிநாட்டு தலையீடுகள் காணப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.
அத்துடன், 2019ம் ஆண்டு தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் தன்மை வெளியேற்ற முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டரை வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் உலகளாவிய ரீதியில் பரவிய கொவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்து, பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்திலேயே 2022 மார்ச் மாதம் தனக்கு எதிராக சூழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தொடர்பான புத்தகமொன்றையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றைய தினம் வெளியிடவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் புத்தகம்
பிரேஷ் என்ட் பிரஷ் என்ற தலைமைப்பிலான புத்தகமொன்று இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த புத்தக வெளியிட்டு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சந்தித்த நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2021 ஜுன் முதல் 2023 மே வரை வழங்கிய தலைமைத்துவம் தொடர்பில் பத்திரிகைகளில் கார்டூன் கலைஞர்களின் பார்வை அடங்கிய புத்தகமொன்றே இவ்வாறு வெளியிடப்படவுள்ளது. (P)