காதலருடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட சரத்குமார் மகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் என்பவரை தான் வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்ள போகிறார். சில நாட்களாக இணையம் முழுக்க இவர்களது நிச்சயம் குறித்த செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் இவர் தன்னை விட வயது மிகவும் அதிகமானவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்பதால் எங்கு பார்த்தாலும் வரலக்ஷ்மி சரத்குமார் பற்றிய டாக் தான். திரை வட்டாரமே பரபரப்பாக பேசும் அளவிற்கு அப்படி என்ன அதிசய திருமணம் என்றால், வரலக்ஷ்மி சரத்குமாரின் காதலருக்கு 15 வயது மதிக்கதக்க பெண் பிள்ளை உள்ளாராம். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்துகொள்ள போகும் நிகோலாய் சச்தேவ் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றுள்ளாராம். நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலான நிலையில், நேற்று தனது நிச்சயதார்தத்தின் வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டிருந்தார்.. நிகோலாய் சச்தேவ்வை காதலித்து மணமுடிக்கப்போகும் வரலக்ஷ்மி சரத்குமார் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Posts