இலங்கையில் மீண்டும் உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் கடந்த சில தினங்களாக குறைவடைந்திருந்த மரக்கறிகளின் விலை, இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, நுவரெலியா உருளைக்கிழங்கு  ஒரு கிலோ  370 ரூபாய் முதல் 380 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும்,

இந்திய உருளைக்கிழங்கு  ஒரு கிலோ 185 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும்,

பாகிஸ்தான் உருளைக்கிழங்கு  ஒரு கிலோ 165 ரூபாய் முதல் 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ஒரு  கிலோ  380 ரூபாய் முதல் 420 ரூபாய் வரையும், இந்திய சிறிய வெங்காயம்  ஒரு கிலோ  200 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையும் யாழ்ப்பாண சிறிய வெங்காயம் ஒரு கிலோ  200 ரூபாய் முதல் 270 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு, வெள்ளை பூண்டு ஒரு கிலோ 500 ரூபாய் முதல் 530 ரூபாவாகவும் தக்காளி ஒரு  கிலோ 1000 ருபாய்க்கும் இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (P)



Related Posts