பெண்களின் மாதவிடாய் வலியை ஆண்களுக்கு கடத்திய ஜப்பான் நிறுவனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜப்பான் நிறுவனம் ஒன்று, மகளிரின் மாதாந்திர வலியை சக ஆண்கள் உணர்வதற்கான உபாயமாக, அறிவியல் சாதனங்களின் உதவியோடு கடத்தியதில் வரவேற்பு பெற்றிருக்கிறது.

டோக்கியோவின் எக்ஸியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஆண் பணியாளர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, செயற்கை மாதவிடாய் வலி பரிசாக வழங்கப்பட்டது. இதற்கக பெரியோனாய்டு என்ற எலெக்ட்ரானிக் சாதனம் மூலம், ஆணின் வயிற்றில் மின் சமிக்ஞைகளை அனுப்பி, மாதவிடாய் வலியை உருவாக்கியது. கீழ் வயிற்றுத் தசையைத் தூண்டி தசைப்பிடிப்பின் வலியனுபவத்தை விர்ச்சுவல் ரியாலிட்டியில் ஆண்கள் உணரச்செய்தனர்.

நாரா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், ஒசாகாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றும் இணைந்து உருவாக்கிய அந்த சாதனம் ஆண்களுக்கு அற்புதமான செயற்கை மாதவிடாய் வலியை பரிசளித்தது. நகர முடியவில்லை, நிற்க முடியவில்லை.. துடிதுடித்துப்போனேன் என்று ஆண்கள் பலரும் தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர். 

மாதந்தோறும் இந்த வலியோடு வீட்டிலும், பணியிடத்திலும் பெண்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள் என்று உணர முடிந்ததும் அவர்கள் மீது பெரும் மரியாதை உருவானது என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1765995876323922374

Related Posts