ஹைதியில் உள்நாட்டுப் போர் மூளும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹைதி நாட்டில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜொவனெல் மோய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக முக்கிய குழுத் தலைவரும், கேங் லீடருமான ஜிம்மி பார்ப்பெக்கியூ செரிஸியர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

அவ்வப்போது ஜிம்மி தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு படையினர் மீதும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.

இப்போது நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. ஏற்கெனவே நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஏரியல் ஹென்றி வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உடனடியாக இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா கவுன்சில் அதிபர் ஏரியலுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் ஏரியல் பதவி விலக வேண்டும் என்ற ஜிம்மியின் கோரிக்கை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

ஏற்கனவே வறுமையின் பிடியில் சிக்கி உள்ள ஹைதி மக்கள், உள்நாட்டு போர் ஏற்பட்டால் மேலும் அதிக பாதிப்பிற்கு உள்ளவர்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Posts