மன அழுத்தத்தை குறைக்க இந்த கப்பலில் பயணம் செய்தால் போதும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மன அழுத்தத்தில் இருந்து விடுபட, மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, நடனம், பயணம் மற்றும் பிற செயல்பாடுகளில் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள். அந்தவகையில், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று, நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மன அழுத்தத்தில் உள்ள நபர்களுக்கு ஒரு தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சியாக இதன் நோக்கம் உள்ளது. பயணிகளுக்கு அற்புதமான, மன அழுத்தமில்லாத, ஆடை இல்லாத பயண அனுபவத்தை அளிக்கும் உலகின் ஒரே கப்பல் பாதை இதுதான். பயணிகளை அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது. எல்லோர் முன்னிலையிலும் காதல் செய்தல், காதல் எண்ணத்தில் மற்றவர்களை தொடுதல் கூடாது. ஆபத்தான அல்லது முரட்டுத்தனமான நடத்தை கூடாது. சட்டவிரோத பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts