ரேடியோவில் RJ வாக பணியாற்றி தனது காமெடியான பேச்சால் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் RJ பாலாஜி. குறிப்பாக அவர் நடத்திய கிராஸ் டாக் என்ற ஷோ இப்போது கேட்டாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தவர். தனது ஆரம்ப காலத்தில் கடனில் மூழ்கி கஷ்டப்பட்டதாகவும் மெல்ல மெல்ல கடினமாக உழைத்து அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் அவர் பல பேட்டிகளில் கூறி இருப்பார். வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாதவர் இவரது பேட்டிகளை கேட்டால் போதும் வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு வரும். நடிகராக களமிறங்கிய RJ பாலாஜி சில படங்களில் காமெடியாக நடித்த நிலையில் அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கி ஹிட் படங்கள் கொடுக்க தொடங்கினார். LKG, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், சமீபத்தில் அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் படம் சுமாரான வசூலை மட்டுமே பெற்றது. இவர் வசனம் எழுதி இயக்கும் படம் எல்லாமே ஏதோ ஒரு சமூக கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும்.
மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்துக்கொண்டால், யாரும் சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற கருத்தை கூறி இருப்பார். வீட்டில் விஷேசம் கதையை எடுத்துக்கொண்டால், அது வயதான பின்னும் காதல் இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக கூறும். சமூக மாற்றம் வேண்டி கதையை உருவாக்கும் நடிகர்களில் பாலாஜி தான் எப்போதுமே நம்பர் ஒன். மாஸ் ஹீரோக்களுக்கு என்னதான் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும் கூட இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இவர் போலவே பகுத்தறிவோடு இயங்கி வருகிறது. தற்சமயம் RJ பாலாஜி இளம் வயது பழைய போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 2003ல் அவர் காதலி திவ்யா (தற்போது மனைவி) உடன் உள்ள புகைப்படம் அது!