வெற்றிக்கு முன்னோட்டம் விட்ட விஜய்! உண்மையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சினிமா போதும், நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என அரசியலில் இறங்கி விட்டார். இவரது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க கடந்த மார்ச் 8ம் தேதி ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் முதல் ஆளாக இணைந்து அடையாள அட்டை பெற்ற வீடியோவை விஜய் வெளியிட்டு இருந்தார். விஜய் செயலியை தொடங்கி வைத்த சற்று நேரத்தில் அது முடங்கியது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்கள் வந்ததால் தளம் முடங்கியது.இந்நிலையில் தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக 50 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை என அரசியல் வட்டாரத்தில் பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர். மாற்றம் பிறக்காத என எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் மத்தியில் விஜய் கட்சி ஆரம்பித்தது வரவேற்கதக்க ஒன்று! ஆண்ட கட்சிகள் எல்லாமே மாறி மாறி ஊழலை கையாண்டு விட்டார்கள். விஜய் மூலமாவது ஊழல் அற்ற ஆட்சி பிறக்கும் என உறுதியாக மக்கள் நம்புவதால் கண்டிப்பாக விஜய்க்கு அரசியலில் வெற்றி உறுதி என்கிறார்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டார புள்ளிகள்.

Related Posts