விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை மதுமிளா. இவர் இந்த சீரியலுக்கு பின்னர் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விஷால் நடித்த பூஜை படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். தொடர்ந்து ரோமியோ ஜுலியட், மாப்பிள்ளை சிங்கம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். தான் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். கனடாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மதுமிலா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் சினிமாவில் ஏன் இவ்வளவு பெரிய பிரேக் என்று ரசிகர்கள் பலரும் கேட்கிறார்கள், அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்கிறார்கள்.அதற்கு மதுமிலா, பிரேக் இல்லை Retired என்று தான் கூற வேண்டும், நான் சினிமாவில் நடிப்பதை முடித்துவிட்டு தான் திருமணம் செய்துகொண்டேன்.எனது கணவருக்கு கனடாவில் தான் வேலை, அதனால் நான் அங்கேயே செட்டில் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பேட்டியில் பார்த்த இவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு குணசித்திர நடிகை, சினிமாவை விட்டு சென்றும் கூட இன்னும் இவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள்.