நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த சம்பவம் தமிழ் சினிமாவையே பரபரப்பாக பேசவைத்தது. தற்போது இருவரும் அவரவர் வேலையில் பிசியாக உள்ளார்கள். இருப்பினும் இவர்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி கொண்டே தான் உள்ளது. அந்த வகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தொகுப்பாளர், நீங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அனிருத், இன்று இந்தியளவில் புகழின் உச்சத்தில் இருக்கிறார் என கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதற்கு தனுஷ் தான் காரணம். அனிருத் இடம் இருக்கும் திறமையை தனுஷ் தான் கண்டுபிடித்தார். அனிருத்திற்கு கீபோர்டு வாங்கி கொடுத்தார். அதன்பின் 3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக போட்டார். இன்று அனிருத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார் ஐஸ்வர்யா. இசையமைப்பாளர் அனிருத் பல மேடைகளில் தனுஷ் தனக்கு கொடுத்த வாய்ப்பை பற்றி பேசி நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts