மொன்றியால் மருத்துவர்கள் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் உயிர் காக்கும் உபகரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆண்டு தோறும் விபத்துக்கள் மூலமாக சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில் விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனேடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

PeTIT VR என்ற இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக தொலை தூரத்தில் இருந்துகொண்டு விபத்துக்களினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவ உதவியாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts