கனடாவில் மூச்சு முட்ட வைக்கும் வாடகை அதிகரிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் மாதமொன்றுக்கான சராசரி வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.  2024 பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது.

 இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகைத் தொகை கடந்த பெப்ரவரி மாதம் 1920 டொலர்களாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு ஆண்டு காலப் பகுதியில் கனடாவில் வாடகைத் தொகையானது 21 வீதமாகவும் மாதாந்த வாடகைத் தொகை சராசரியாக 384 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

கனடாவில் மிகவும் வேகமாக வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவான மாகாணமாக அல்பர்ட்டா மாகாணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!