ஹோட்டல் அறையில் பெண் வெட்டி கொலை l ஆண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பொத்துவில் பகுதியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெண்ணை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த ஆண், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.

அறையின் குளியலறையில் குறித்த ஆண்ணின் சடலம், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹகலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (P)


Related Posts