போஷாக்கு தொடர்பான உலகளாவிய அறிக்கையை நிராகரித்த இலங்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கைச் சிறுமிகள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையான The Lancet வெளியிட்ட ஆய்வு அறிக்கையினை இலங்கை நிராகரித்துள்ளது.

குறித்த ஆய்வின்படி, இலங்கையில் சுமார் 410,000 சிறுமிகள் எடை குறைந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.

1990 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஊட்டச்சத்து மற்றும் சுகாதார அணுகளை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட செயற்றிட்டங்கள் காணப்படுகின்ற போதிலும், 1990 ஆம் ஆண்டு முதல் இந்த துரதிர்ஷ்டவசமான நிலை காணப்படுவதாக ஆய்வறிக்கையின் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன், 2022 ஆம் ஆண்டில் சுமார் 880 மில்லியன் வயது வந்தவர்கள் மற்றும் 159 மில்லியன் சிறுவர்கள் உடல் பருமனுடன் காணப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நிலைமையானது நிலையாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை தொடர்பில் உலகளாவிய அறிக்கையின் முடிவுகளை இலங்கை சுகாதார துறைசார் அதிகாரிகள் கடுமையாக நிராகரித்துள்ளனர்.

ஆய்வில் வரையறுக்கப்பட்டுள்ள தரவுகள் இலங்கையின் உண்மையான சூழ்நிலையுடன் முரண்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (P)


Related Posts