மே வரை வெப்பமான காலநிலை: நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிலவும் வறட்சி காரணமாக நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக மேட்டுநிலப் பகுதிகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்பின் முடிவிடங்களில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை எந்தவொரு பகுதிக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவில்லை என சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சி,  வெப்பமான காலநிலை மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதுதான் வெப்பமான காலநிலை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (P)


Related Posts