கூடுதல் சாம்பார் தராததால் உணவக மேலாளர் கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள உணவகத்தில் தஞ்சாவூரை சேர்ந்த அருண் என்பவர் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் உணவகத்திற்கு இட்லி பார்சல் வாங்க வந்தனர். 

அப்போது கூடுதலாக சாம்பார் பாக்கெட் வேண்டும் என்று தந்தையும் மகனும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், உணவக மேலாளர் அருண் மறுத்துவிட்டதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் வாடிக்கையாளர் முன்னிலையில் அருணை சரமாரியாக தாக்கினார். இதில், நிலைகுலைந்த அருண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்கர், அவரது மகன் அருண்குமார் ஆகியோரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த தகராறில் கொலை செய்யப்பட்ட உணவக மேலாளர் அருணுக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Posts