சிக்கன் பக்கோடா தர மறுத்த கடைக்காரருக்கு கத்தி குத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை பாடி குமரன் நகர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருபவர் சிவா (31). இவர் வழக்கம்போல் நேற்று தனது கடையை திறந்து சிக்கன் பக்கோடா போடுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த நபர், சிவாவிடம் சிக்கன் பக்கோடாவை கடனாக தருமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், சிவா கடனாக தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் சிவாவின் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சிவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொரட்டூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிவாவை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த உதயா என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மதுபோதையில் சாலையில் சுற்றிக் கொண்டிருந்த உதயாவை மடக்கிப் பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts