இலங்கை போன்ற நிலைமை பாகிஸ்தானில் ஏற்படும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியலா ஜெயிலில் நிருபர்களிடம் உரையாடினார்.

சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டு பெறவுள்ள சூழலில், பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, தேர்தல் மோசடிக்கு எதிராக, எங்களுடைய கட்சி அமைதியான வழியில் போராடும் என தெரிவித்ததுடன், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்றும் கூறினார். அந்நாட்டில், ஏப்ரல் 2-ந்தேதி செனட் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலிலும் கூட, குதிரை பேரம் நடைபெறும் என்று அவர் தன்னுடைய கணிப்பை வெளியிட்டு உள்ளார்.

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நாட்டு மக்கள் வீதிக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன. அதிபர் மாளிகைக்குள் புகுந்து, போராட்டக்காரர்கள் சூறையாடினர். மக்கள் கொந்தளிப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர், பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். 

அதன்பின்னர், அவர் இலங்கையின் அதிபரானார்.இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இரண்டாண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில், பொது தேர்தல் நடந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் அந்நாட்டில் ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

அவருடைய தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ந்தேதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கூட்டம் நடந்தது. அப்போது அவர், நாங்கள், சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம் என்றும் வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என்றும் கூறினார்.

Related Posts