நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இப்போது சினிமா வேண்டாம் என முடிவு செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ் கமெர்ஷியல் திரைப்படங்களில் ஒன்று மதுர. இப்படத்தில் ஒரு பக்கம் கலெக்டராகவும் மறுபக்கம் காய்கறி வியாபாரியாகவும் நடித்திருப்பார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் நடிகை ரக்ஷிதா நடித்திருந்தனர்.
இதில் நடிகை ரக்ஷிதா தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரக்ஷிதாவா இது? என ரசிகர்கள் ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் நடிகை ரக்ஷிதா. ஒரு பெண் திருமணம் ஆகி குழந்தை பெற்றாலே அவளது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உடல் எடை கூடுவது வழக்கம். ஆனால் இந்த எதார்த்தம் புரியாமல் இருப்பதால் சாதாரண பெண்களும் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். சாதாரண பெண்களே விமர்சனத்துக்கு உள்ளாகும் போது, சினிமா பிரபலங்களை விட்டு வைப்பார்களா?
Font size:
Print
Related Posts