இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு- பொருட்களின் விலை தொடர்பில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது.

தற்போது நாட்டின் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை 300 ரூபா 60 சதமாகவும் மற்றும் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.

அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 12.1 சதவீதமாகவும், இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இருப்பினும்,

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறும் போதும் இறக்குமதியாளர்கள் அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இலாபத்தை இலக்கு வைத்து அவர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டு மக்கள் விலைகளில் மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை என்கின்றனர். (P)



Related Posts