டிக்-டாக் செயலிக்கு எதிராக அமெரிக்காவில் சட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டிக்-டாக் செயலியை கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 352 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட பின்னர் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், இந்த மசோதா டிக்-டாக் செயலியை தடை செய்யாது எனவும், அதேசமயம் அதன் உரிமையாளரை கட்டுப்படுத்தி மக்களின் தனிநபர் உரிமையை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

சீன செயலியான டிக்-டாக் தனிநபர் உரிமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி இந்தியா உள்பட பல நாடுகள் அதனை தடை செய்துள்ளன.

விமர்சனத்துக்கு உள்ளான பிரபல நடிகையின் சமீபத்திய புகைப்படம்! | Thedipaar News

Related Posts