இனி இப்படி சொன்னா முத்தம் கொடுத்துவிடுவேன், நதியாவை மிரட்டிய நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நதியா 80களில் இருந்தே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு அன்றும் இன்றும் என்றுமே ரசிகர் பட்டாளம் உண்டு. ஏனெனில் இன்றும் இளமையாக பல படங்களில் நடித்து வருகிறார். எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி உள்ளிட்ட பல்வேறு படங்களில், குறிப்பாக தற்போது தெலுங்கு படங்களில், அம்மா ரோல்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் மலையாள சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். எப்போதும் ஏதாவது ஒரு நடிகை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. 

அந்த வகையில் இவர் குறித்த செய்தி வைரலாகி வருகிறது. பிரபல மலையாள நடிகர் முகேஷ் உடன் ஒரு படத்தில் நடித்த போது நதியாவை தினமும் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாராம். ஒரு நாள் முகேஷ் அப்படி ஒரு ஜோக் சொன்னபோது அவரை ஜோக்கர் என கூறியுள்ளார் நதியா. அதை கேட்ட படக்குழுவினர் அதன் பின் முகேஷை ஜோக்கர் என சொல்லி கலாய்த்து இருக்கின்றனர். நதியா இனிமேல் தன்னை ஜோக்கர் என சொன்னால் முத்தம் கொடுப்பேன் என விளையாட்டாக மிரட்டி உள்ளார் முகேஷ். அதனால் அவரை எப்போது பார்த்தாலும் உதட்டை கைகளால் மூடிக்கொண்டு செல்வாராம் நதியா.இந்த தகவலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts