கடற்பரப்பில் காயங்களுடன் மீனவரின் சடலம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் தெப்பம் மீது இனந்தெரியாத படகு மோதியதில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கரையொதுங்கியுள்ளது.

மருதங்கேணியைச்  சேர்ந்த முத்துச்சாமி தவராசா (வயது- 61) என்பவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (16) அதிகாலை 4.00 மணியளவில் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார்.  

இதன்போது இனந்தெரியாத படகு ஒன்று தெப்பத்தை  மோதியதாக தெரிவிக்கப்பட்டது.  

இதில் தெப்பம் கரையொதுங்கி உள்ள நிலையில் மீனவர் காணாமல் போயிருந்தார்.

 காணாமல் போன மீனவரை தேடும் பணியில் அப்பகுதி  மக்களும் கடற்படை சுழியோடிகளும் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 17) மாலை சடலம் மருதங்கேணி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

சடலத்தை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் ஜெமில் பார்வையிட்டார்.

சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்படுவதால் தடயவியல் பொலிசாரை அழைத்து தடயங்கள் பெறப்பட்ட பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்

இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மருதங்கேணி கடற்பரப்பில் காயங்களுடன் மீனவரின் சடலம் | Thedipaar News

Related Posts