பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக சுப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் குழு எதிர்வரும் 21ஆம் திகதி அழைக்கப்பட்டதாக அதன் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பர் மார்க்டெ்களால் வழங்கப்படும் பொலித்தீன் பைகள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சுப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள், அண்மையில் சுற்றுச்சூழல் இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்றக் குழுவிற்கு அழைக்கப்பட்டனர். (P)

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் | Thedipaar News

Related Posts